காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தமிழ் சினிமா உலகில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகர்ளாக இருப்பவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். ஆரம்ப கால கட்டங்களில் இருவரும் ஒன்றாக சில படங்களில் நடித்து பின்னர் பேசிக் கொண்டு பிரிந்தார்கள். அதாவது இருவரும் தனித் தனியாக கதாநாயகனாக நடித்தால்தான் வளர முடியும் என்பதுதான் அந்த பிரிவுக்குக் காரணம்.
அரசியல் ரீதியாக இருவருக்கும் மாற்றுக் கருத்து இருந்தாலும், இப்போதும் அவர்கள் இருவரும் நண்பர்களாகவே இருக்கிறார்கள். ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவதாக அறிவித்து பின்னர் பின்வாங்கினார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து தனியாக நின்று, தற்போது திமுக கூட்டணியில் உள்ளார்.
கடந்த வருடம் நடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது நடந்த பேச்சு வார்த்தையின்படி ராஜ்யசபா எம்.பி சீட் ஒன்று திமுக சார்பில் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அடுத்த வாரம் அவர் பதவியேற்க உள்ள நிலையில் தனது நீண்ட கால நண்பர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து தனது சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்றுள்ளார்.
“புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன், மகிழ்ந்தேன்,” என இது குறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
‛‛மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் கமலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்'' என நடிகர் ரஜினி பதிவிட்டுள்ளார்.




