'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

குபேரா படத்தை அடுத்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‛தி கேர்ள் பிரண்ட்' என்ற படம் திரைக்கு வரவுள்ளது. விரைவில் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போகிறார் ராஷ்மிகா. இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛அனிமல் படத்தில் ரன்பீர் கபூரின் கதாபாத்திரம் குறித்து நான் சொன்ன கருத்துக்களை ஊடகங்கள் தவறான கோணத்தில் சித்தரித்து அதை சர்ச்சையாக்கி விட்டதாக'' தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
குறிப்பாக நான் சொல்லும் சாதாரண விஷயங்களை கூட தவறாக புரிந்து கொள்வதோடு, அதை சர்ச்சையாக்க வேண்டும் என்று திட்டமிட்டே வார்த்தைளை திரித்து வெளியிடுகிறார்கள். நான் சொல்லும் கருத்துக்களை விமர்சன கண்ணோட்டத்தில் பார்ப்பதோடு, சோசியல் மீடியாவிலும் டிரோல் செய்கிறார்கள்.
என் கருத்துக்கள் மட்டுமின்றி அதில் அவர்களது சொந்த கருத்துகளையும் நான் சொன்னது போன்று சேர்த்து விவாதங்களுக்கு உட்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ள ராஷ்மிகா, இனிவரும் காலங்களில் ஊடங்களிடம் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட போகிறேன். விமர்சனங்களை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு கருத்தையும் நான் வெளியிட மாட்டேன் என்று முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.




