காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

தமிழில் வெளியான 'இடி மின்னல் காதல்' என்ற படத்தை இயக்கிய பாலாஜி மாதவன் தற்போது கன்னடம், தமிழில் தயாராகும் படத்தை இயக்குகிறார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. என்றாலும் சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதனை சிவராஜ்குமார் வெளியிட்டார்.
சிவராஜ்குமாருடன் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் கன்னட திரையுலகின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்வெஸ்டிகேட்டட் வித் ஆக்சன் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரித்திக் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சூரஜ் சர்மா, கிருஷ்ணகுமார். பி.சாகர் ஷா இணைந்து தயாரிக்கிறார்கள். சிவராஜ்குமார் முதன்முறையாக சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் பேருந்து பயணத்தில் நடைபெறும் குற்ற சம்பவம் தொடர்பான புலனாய்வு விசாரணையை மையப்படுத்தி உருவாகிறது.




