‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

1985ம் ஆண்டை 'மோகன் ஆண்டு' என்றே குறிப்பிடலாம். காரணம் அந்த ஆண்டு அவர் நடித்த 18 படங்கள் வெளிவந்து சாதனை படைத்தது. அதிலும் குறிப்பாக 1985ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான அவரது 'உதயகீதம், பிள்ளைநிலா, தெய்வப் பிறவி' ஆகிய மூன்று படங்களில் உதயகீதம் வெள்ளி விழா படம். மற்ற இரண்டு படங்களும் 100 நாள் படங்கள். இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
'உதயகீதம்', கோவைத்தம்பி தயாரிப்பில், கே.ரங்கராஜ் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் வெளியானது. மோகன், ரேவதி, லட்சுமி முதலானோர் நடித்த இந்த படம் இளையராஜாவின் 300வது படம்.
'பிள்ளைநிலா', கலைமணி கதை வசனத்தில் அவர் தயாரிப்பில் மனோபாலா இயக்கத்தில் வெளியானது; காதலும் த்ரில்லரும் கலந்த படம். இந்த படத்தில்தான் பேபி ஷாலினி அறிமுகமானார்.
டி.ராமாநாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய படம் 'தெய்வப் பிறவி'. ராதிகா, ஊர்வசி மோகனுடன் நடித்தனர். சங்கர் கணேஷ் இசையமைத்தார்.
இப்போதெல்லாம் ஹீரோக்கள் வருடத்திற்கு 3 படங்கள் நடிப்பதே பெரிய விஷயமாக இருக்கும்போது ஒரே நாளில் 3 படம் வெளியாவதும், அதில் ஒரு படம் வெள்ளி விழா கொண்டாடுவதும், மற்ற இரு படங்கள் 100 நாள் படங்களாக அமைவதும் சாத்தியமே இல்லாத ஒன்றாகும்.