பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

தமிழ் சினிமா உலகில் தரமான பல படங்களைக் கொடுத்த ஒரு தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். 'ஈட்டி, ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் கார்த்தி, கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.
படம் பற்றி விஷால், “இதோ ஆரம்பிக்கிறோம்! மதகஜராஜா வெற்றியைத் தொடர்ந்து, எனது அடுத்த படமான விஷால் 35ஐ சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அவர்களின் 99வது படமாக, இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்குகிறோம். இது எங்களின் முதல் கூட்டணி. முதன்முறையாக என்னுடன் திரையைப் பகிர்ந்து கொள்ளும் துஷாரா விஜயன், மதகஜராஜா படத்திற்குப் பிறகு மீண்டும் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவாளராகவும், மார்க் ஆண்டனி படத்திற்குப் பிறகு என் அன்பு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பாளராகவும் இணைகிறார்கள். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த், தயாரிப்பு வடிவமைப்பு துரைராஜ், ஸ்டைலிங் வாசுகி பாஸ்கர்.
அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினர். முழு நேர்மறை ஆற்றலுடன், உங்களின் ஆசிர்வாதமும் ஆதரவும் கொண்டு சென்னையில் 45 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். இந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இறைவன் ஆசீர்வதிக்கட்டும்!,” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.