'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

1985ம் ஆண்டு வெளியான படம் 'சின்ன வீடு'. சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கோர்வையான, கச்சிதமான திரைக்கதையை தன்னுடைய பாணியில் எழுதி, இயக்கி இருந்தார் கே. பாக்யராஜ்.
பொருந்தாத மனைவியை வெறுத்து இன்னொரு பெண்ணை தேடும் ஒரு ஆணின் கதை இது. கோவலன் கண்ணகி கதையின் உல்டா என்றும் சொல்லலாம். தன்னுடைய வருங்கால மனைவி, அழகுப் பதுமையாக இருக்க வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் பாக்யராஜிற்கு குண்டாக இருக்கும் கல்பனாவை திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.
மனைவியை ஒதுக்கி வைத்து வேண்டா வெறுப்பாக குடும்பம் நடத்தும் பாக்யராஜ், பானு என்கிற ஓர் அழகான பெண்ணின் காதலில் விழுகிறார். இதனால் ஏற்படும் உறவுச்சிக்கல்களும், குழப்பங்களும் இறுதியில் எவ்வாறு தீர்கின்றன என்பதை நிறைய காமெடியும் கொஞ்சம் சென்டிமென்ட்டும் கலந்து சொல்லிய படம்.
கிட்டத்தட்ட இதே மாதிரியான கதையை கொண்ட 'கோபுரங்கள் சாய்வதில்லை' படம் இரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இருந்தது. மனைவியாக வந்த அருக்காணியை (சுஹாசினி) கைவிட்டு மார்டன் பெண்ணான ராதாவோடு மோகன் சுற்றும் கதை.
இந்த படம் மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால் 'சின்ன வீ'டு படத்தை இப்போதே ரிலீஸ் செய்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கருதிய பாக்யராஜ் படம் தயாராகி 6 மாதங்களுக்கு பிறகு படத்தை வெளியிட்டார்.




