பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ராஞ்சானா, அட்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து ஹிந்தியில் ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தேரே இஸ்க் மெயின்' . இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு டில்லி, பனாரஸ் ஆகிய பகுதிகளில் பல கட்டமாக நடைபெற்றது.
சமீபத்தில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விமானப் படை அதிகாரியாக தனுஷ் நடித்து வந்தார். இந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதாக தனுஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த போட்டோவில் தனுஷ், கீர்த்தி சனோன் இருவர்களின் கைகளும் ரத்தத்துடன் உள்ளது. காதல் தொடர்பான கதையில் இப்படம் உருவாக வருவதாக கூறப்படுகிறது.




