மார்ச் 6ல் வெளியாகிறது ரச்சிதா நடித்த ஹாரர் படம் | சாய் பல்லவி நடிப்பை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன் : மானசா வாரணாசி ஓபன் டாக் | சொந்த தொகுதியிலேயே வீடு கட்டும் பணியை துவங்கிய பாலகிருஷ்ணா | மும்பை படப்பிடிப்பில் படக்குழுவினருக்காக சென்னையிலிருந்து உணவு வரவழைத்த பிரபாஸ் | சிவராஜ்குமாருக்கு கர்நாடக முதல்வர் வாழ்த்து | சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா |

தக் லைப் படத்துக்கு பின் சிம்பு நடிக்கும் படம் எது? முதலில் ரிலீஸ் ஆகும் படம் எது? என்ற விஷயத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள். சில வாரங்களுக்கு முன்பு தக் லைப் பின் பார்க்கிங் பாலகிருஷ்ணன் படம், அடுத்து அஸ்வத் மாரிமுத்து படம், இடையில் தேசிங் பெரியசாமி இயக்கும் படங்களில் சிம்பு நடிப்பார் என்று கூறப்பட்டது. தக் லைப் தோல்விக்குபின் அவர் வட சென்னை 2வில் நடிக்கப் போகிறார். வெற்றிமாறன் இயக்கப்போகிறார் என தகவல் வந்தது. ஆனால் இதுபற்றி எந்த அறிவிப்பு வராமல் இருந்தது.
வட சென்னை 2 அந்த கால படம் என்பதால், சிம்பு கெட்-அப் மாற வேண்டியது இருக்கும். மற்றபடங்களில் நடிக்க முடியாது. ஆகவே, அவரின் லைன் அப் பாதிக்கப்படும் சூழல் இருந்தது. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படம் சிம்புவை வைத்து இயக்குவதாக தெளிவுப்படுத்தி உள்ளார். மேலும் இது வட சென்னையை தொடர்புபடுத்தி எடுக்கப்படும் படம் ஆனால் வட சென்னை 2 அல்ல தெளிவுப்படுத்தி உள்ளார்.




