ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வா வாத்தியார்'. கார்த்தி, எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ள இந்த படம் ஒரு பேண்டஸி கதை களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 160 நாட்கள் படமாக்கினர். ஆனால், இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறவில்லை. இதற்கிடையில் இந்த படத்திற்கு திடீர் பண சிக்கல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனர். இப்போது பிரச்னைகள் முடிவடைந்தது மீதமுள்ள படப்பிடிப்பை முடித்து இவ்வருட செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.




