பிளாஷ்பேக்: சிறுபட்ஜெட் படங்களுக்கு தனி நிறுவனம் தொடங்கிய மார்டன் தியேட்டர்ஸ் | ரிலீசுக்கு தயாரான ரோபோ சங்கர் நாயகனாக நடித்த கடைசி படம் | சத்யன் அந்திக்காடு உடன் மீண்டும் இணைந்த மோகன்லால் | 18ம் படி கருப்புக்கு 18 அடி அரிவாள் : ஆர்.ஜே.பாலாஜி காணிக்கை | என் தந்தையையும் சட்டையை கழற்ற வைத்தார் சல்மான் கான் ; நடிகர் வருண் தவான் தமாஷ் பேச்சு | நடிகர் சங்கத்தின் ஒற்றுமைக்காக மம்முட்டி, மோகன்லால் தலையிட வேண்டும் ; பிரித்விராஜ் அம்மா கோரிக்கை | அல்லு அர்ஜுன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கிரிக்கெட் வீரர் | ராஜினாமா செய்த திரிஷ்யம் நடிகை பகிரங்க குற்றச்சாட்டு ; நடிகர் சங்கத்திற்குள் சலசலப்பு | முதல்வர் நடிப்புக்கு முழுக்கு... முன்னாள் துணை முதல்வர் ரீ என்ட்ரியா? | தவறுதலாக கிரிக்கெட்டை கால்பந்தாக மாற்றிய ராம்சரண் ; கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் மன்னிப்பு கேட்டார் |

திருமணம் ஆன பின் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீ-மேக்கான பேபி ஜான் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து அவர் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
புதியவர் சந்துரு இயக்கி உள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவருடன் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சுப்பராயன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இப்படம் ஒரு வழியாக வரும் ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு டீசரையும் வெளியிட்டுள்ளனர்.




