பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. | ஆஞ்சநேயர் பிறந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய 'ஜெய் ஹனுமான்' | தனுஷை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன் : கொச்சியில் நடந்தது என்ன? |

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ், 75, மாரடைப்பால் சென்னையில் காலமானார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை, ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் மறைவு செய்தி அறிந்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முதல்வர் உடன் அமைச்சர்கள் உதயநிதி, கேஎன் நேரு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக ராஜேஷ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் அறிக்கையும் வெளியிட்டார். அதில், ‛‛தமிழ்த் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.