இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் தனது அறிமுகப்படத்திலேயே தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் சந்தீப் ரெட்டி வங்கா. பின்னர் அந்தப் படத்தில் ஹிந்தியில் 'கபீர் சிங்' என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார். அதற்கடுத்து ஹிந்தியில் அவர் இயக்கி 2023ல் வெளிவந்த 'அனிமல்' படமும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடுமையான வன்முறைக் காட்சிகள் நிறைந்த படம் என்று விமர்சிக்கப்பட்டது. இருந்தாலும் 900 கோடி வரை வசூலித்தது.
அப்படத்திற்குப் பிறகு பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கினார். அப்படத்தின் நாயகியாக 'அனிமல்' படத்தில் நடித்த திரிப்தி டிம்ரி நடிக்க உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அந்த அறிவிப்பில் படம் எந்த மொழிகளில் வெளியாக உள்ளதோ அந்த மொழிகளில் எல்லாம் அவரது பெயரைக் குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டிருந்தார்கள். அதில் சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் உருவாக்கப்படும் பெரிய படங்களை ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில்தான் ஒரே சமயத்தில் வெளியிடுவார்கள். 'புஷ்பா 2' படத்தை பெங்காலி மொழியில் கூடுதலாக வெளியிட்டார்கள். இப்போது 'ஸ்பிரிட்' படத்தை ஆங்கிலம், சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளார்கள். இதன் மூலம் பான் வேர்ல்டு வரை போக உள்ளார்கள்.




