Advertisement

சிறப்புச்செய்திகள்

ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ்

23 மே, 2025 - 06:15 IST
எழுத்தின் அளவு:
I-will-face-the-fraud-case-legally-Sam-CS
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளரான சாம் சி.எஸ் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் இந்த புகாரை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரில், நான் தயாரித்த 'தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு' படத்திற்கு இசையமைக்க 25 லட்சம் வாங்கிவிட்டு படத்திற்கு இசையமைக்காமலும் பணத்தையும் திருப்பி தராமலும் ஏமாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 2020ல் சலீம் அலிகான் தயாரிக்கும் 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' என்ற படத்துக்கு இசையமைக்க என்னை ஒப்பந்தம் செய்தார். பல ஆண்டுகளாக தொடர்பில் இல்லாத அவர், திடீரென்று முழு படத்தையும் முடித்ததாக சொல்லி, என்னை இசையமைக்க கேட்டார். காலதாமதமாகும் என்று சொன்னேன். காத்திருப்பதாக சொன்ன அவர், கோவை காவல்நிலையத்தில் என் மீது புகார் அளித்தார். எனது தரப்பில் ஆதாரங்கள் அளிக்கப்பட்டது. பிறகு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். செயலாளர் எஸ்.கதிரேசன் முன்னிலையிலும், இசையமைப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டு, தயாரிப்பாளரின் நிலையை மனதில் கொண்டு, நிர்வாகிகளின் ஆலோசனைப்படி, ஏற்கனவே இப்படத்துக்கு சில பாடல்களுக்கு நான் இசையமைத்தாலும், நான் வாங்கிய முன்பணத்தை திருப்பி தர முடிவு செய்தேன். அதற்கு யோசித்துவிட்டு பேசுவதாக சொன்ன சலீம் அலிகான், கோயம்பேடு காவல்நிலையத்தில் என் மீது மோசடி புகார் அளித்துள்ளதாக செய்தி வெளியானதை அறிந்து இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

சிலரது தூண்டுதலால் என்னை பற்றி அவதூறு பரப்பி, என்னிடம் பணம் பறிக்கும் தீயஎண்ணத்துடன் அவர் இருக்கிறார். எனது விளக்கத்தை காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் அளிப்பேன். சமீர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு சாம் சி.எஸ் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பூமிகா ஆசை நிறைவேறுமா?பூமிகா ஆசை நிறைவேறுமா? ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap