ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, 'விடுதலை, கருடன், மாமன்' போன்ற படங்களின் மூலம் கதாநாயகன் பாதைக்கு திரும்பியுள்ளார்.
தற்போது 'மாமன்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் சிம்புக்காக நகைச்சுவை கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சூரி கூறுகையில், "நான் சரி என சொன்னாலும் தம்பி சம்மதம் சொல்லமாட்டார். அண்ணா நாம் இருவரும் இணைந்து நடிப்பதாக இருந்தால் சரிசமமான கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என தம்பி சொல்லி இருக்கிறார். அப்படி ஒரு கதை அமைந்தால் கண்டிப்பாக இணைந்து நடிப்போம்" எனத் தெரிவித்தார்.




