சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா |

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த ரஜினி தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் மீண்டும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் மற்றும் முதல் பாகத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர எஸ்.ஜே .சூர்யா, பஹத் பாசில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு நடிகர் பால கிருஷ்ணாவும் ஒரு கெஸ்ட் ரோலில் போலீசாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரிடத்தில் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள். சிறப்பு ரோல் என்றாலும் அவருக்கு கணிசமான சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.