பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் | சபரிமலை தங்கம் திருட்டு : அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர் | முதல்வரை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா | ஏப்ரல் 27ல் 'தாய் கிழவி', தடங்கல் இல்லாமல் வெளியாகுமா? | ஏழுமலை 2ம் பாகம் பணியில் அர்ஜூன் | சென்னையில் 3 தெருக்களுக்கு இசைக் கலைஞர்கள் பெயர் | விஜய் , சிம்பு குறித்து பகிர்ந்த சீமான் |

'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பான் இந்தியா ஸ்டார் ஆக உயர்ந்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அதன்பின் அவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே பான் இந்தியா என்ற அந்தஸ்திலேயே வெளியாகின. அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களும் அப்படியாகவே உருவாகி வருகின்றன.
பிரபாஸ் தற்போது 'தி ராஜா சாப், பாஜி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 'தி ராஜா சாப்' படத்தை மாருதி இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 'பாஜி' படத்தை ஹனு ராகவுப்படி இயக்கி வருகிறார். இப்படத்தில் இமான்வி, ஜெயப்பிரதா, மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இவற்றை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க உள்ளார் பிரபாஸ். நாயகியாக நடிக்க தீபிகா படுகோனே ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் துவங்கும் என படத்தின் தயாரிப்பாளர் பூஷன்குமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இவற்றோடு 'சலார் 2, கல்கி 2898 பாகம் 2' ஆகிய படங்களிலும் பிரபாஸ் நடிக்க வேண்டியுள்ளது. 'சலார் 2'க்கு முன்பாக 'கல்கி 2' படத்தில் அவர் நடிக்கலாம். அடுத்த சில வருடங்களுக்கு பிரபாஸ் ரொம்பபே பிஸி.




