சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அஜித் ரசிகர்களுக்குப் படம் பிடித்துப் போனது. அதனால், அஜித் நடித்து வெளியான படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதற்கு முன்பு அந்த சாதனையைத் தக்க வைத்திருந்த படம் 'விஸ்வாசம்'. தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் வசூல் 230 கோடியைக் கடந்திருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 130 கோடி வசூல் கடந்திருக்கலாம் என்கிறார்கள்.
இவ்வளவு வசூல் என்றாலும் வியாபாரத்தின் அடிப்படையில் படத்திற்கான 'பிரேக் ஈவன்' இன்னும் நடைபெறவில்லை என்ற ஒரு தகவலும் கோலிவுட் வட்டாரங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மே 1ம் தேதி வரை பெரிய படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் இந்த வார இறுதியிலும் 'குட் பேட் அக்லி'க்கான வசூல் திருப்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய லாபம் இல்லை என்றாலும் மிதமான லாபத்துடன் படத்தின் ஓட்டம் நிறைவடையும் என்கிறார்கள்.




