
கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஆதி
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆதி, ‛‛நடிப்பு, இசை இரண்டையும் கஷ்டமாக பார்க்கவில்லை. இதற்கு தான் வாழ்க்கையில் ஆசைப்பட்டேன். நடிப்பு, இசை இரண்டும் வேறு வேறு. இசை உடன் ஒப்பிடும்போது நடிப்பு கொஞ்சம் கஷ்டமானது. காரணம் அதற்காக நிறைய மெனகெட வேண்டி உள்ளது. ஆனால் இசை எனக்குள்ளேயே இருப்பதால் கொஞ்சம் ஈஸியாக உள்ளது.
ஒருகாலத்தில் ஆல்பம் என்றால் என்ன என்று கேட்டாங்க. இன்றைக்கு சினிமா பாடல்களுக்கு இணையாக ஆல்பம் பாடல்களும் மக்களிடம் வரவேற்பு பெறுகிறது. வெளிநாடுகள் போன்று இனி இங்கேயும் ஆல்பத்திற்கு தனித்துறை வரும். அடுத்து ஜோ பட இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கும் ஒரு படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறேன். இதற்காக மூன்று மாதங்களாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறேன். ஜுன் அல்லது ஜுலையில் படப்பிடிப்பு துவங்கும். மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பாடல் கம்போசிங் நடக்கிறது. ஒரு பாடல் ரெடியாகிவிட்டது"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!