விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் | எக்கோ பட இயக்குனருக்கு இறால் பிரியாணி விருந்தளித்த பிரபாஸ் | அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன மோகன்லால் மகள் | கணவர் டைரக்ஷனில் சல்மான் கானுக்கு ஜோடியாகும் சமந்தா |

இயக்குனரும், நடிகருமான எஸ்.எஸ் ஸ்டான்லி, 58 உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஸ்டான்லி. இயக்குனர்கள் மகேந்திரன், சசி ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஸ்ரீகாந்த், சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல்படமே ஓரளவுக்கு அவரை பேச வைத்தது. தொடர்ந்து தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன், மீண்டும் ஸ்ரீகாந்தை வைத்து மெர்க்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை போன்ற படங்களை இயக்கினார்.
பெரியார், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் நடித்தார். இயக்குனர்கள் சங்கத்திலும் சில பொறுப்புகளில் இருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டான்லி இன்று(ஏப்., 15) காலமானார்.
எஸ்.எஸ்.ஸ்டான்லியின் உடல் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
கடந்த ஞாயிறு அன்று தான் தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைப்புலி ஜி சேகரன் காலமானார். அந்த சோகம் தீரும் முன்பே இப்போது இவரின் மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




