ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன்
Advertisement
Advertisement
ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன்
ஏப் 05, 2025
அ நிறம் | அளவு
Advertisement
கோலமாவு கோகிலா படத்தில் இயக்குனரான நெல்சன், அதன்பிறகு டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற படங்களை இயக்கினார். தற்போது ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் பிறகு அவர் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறாராம். ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து வார்-2 என்ற படத்தில் தற்போது நடித்திருக்கும் ஜூனியர் என்டிஆர், அதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கும் டிராகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களை எல்லாம் நடித்து முடித்ததும் அவர் நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!