இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்துள்ளார் அஜித் குமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். திரிஷா, பிரசன்னா, பிரபு, சுனில் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ள இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
இதையொட்டி கடந்த சில வாரங்களாக இந்த படத்திலிருந்து ஒவ்வொரு பாடல் வெளியிடப்பட்டு வருகிறது. அதோடு டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த படத்திற்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் பிரீமியர் காட்சி ஏப்ரல் 9ம் தேதி அன்று அமெரிக்காவில் வெளியாகிறது என விநியோக நிறுவனம் அறிவித்துள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவையும் துவங்கி உள்ளனர்.




