அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

தென்னிந்திய சினிமா தாண்டி ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ஏப்ரல் ஐந்தாம் தேதி இவரின் பிறந்தநாள் ஆகும். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்தப்பதிவில், இது என்னுடைய பிறந்தநாள் மாதம். அதனால் நான் ரொம்ப உற்சாகமாக உள்ளேன். வயது அதிகரிக்கும் போது பிறந்தநாள் கொண்டாடும் ஆர்வம் குறைந்து விடும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அந்த ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதோடு எனக்கு 28 வயது முடிந்து 29 வயதாகி விட்டது என்பதை நம்பவே முடியவில்லை. கடந்த வருடத்தை ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் கடந்து வந்துள்ளேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பிறந்த நாளை கொண்டாடாமல் விடுவேனா என்று அவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அவரது பதிவுக்கு லைக் கொடுக்கும் ரசிகர்கள் அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.