'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு |

பல திரைப்படங்களின் வெற்றிக்கு ஒரே ஒரு பாடல் காரணமாக அமைந்து விடும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் 'நாளை நமதே' படத்தில் 'நாளை நமதே' என்ற பாடல். இப்படி ஒரு பாடல் 1948ம் ஆண்டே வெளிவந்து படத்தையும் வெற்றி பெற வைத்தது. படம் 'ஆதித்யன் கனவு'. பாடல் 'மதுரமான ருசி உள்ளதே... பால்கோவா...' என்ற பாடல்.
மார்டன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம் இயக்கி, தயாரித்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம், அஞ்சலி தேவி, டி.ஆர்.ரஜனி, கே.பி.கேசவன், எம்.ஜி.சக்ரபாணி, காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், ஜெய கவுரி, ஏ.கருணாநிதி மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.
உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள் ஒரு நாட்டின் தளபதியாக இருப்பார்கள். நண்பர்களில் ஒருவருக்கு ஆண் குழந்தையும், இன்னொருவருக்கு பெண் குழந்தையும் பிறந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உறுதி பூண்டிருப்பார்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து வெவ்வேறு தேசங்களுக்கு சென்று விடுவார்கள். ஒருவருக்கு டி.ஆர்.மகாலிங்கமும், இன்னொருவருக்கு அஞ்சலிதேவியும் குழந்தைகளாக பிறப்பார்கள். அவர்களின் கனவு படி இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்பதுதான் படத்தின் கதை.
பல படங்களில் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர ஒரு குடும்ப பாடல் இருக்கும் அப்படி இந்த படத்தில் குடும்பத்தை சேர்க்கும் பாடலாக அமைந்ததுதான் 'பால்கோவா' பாடல். இந்த பாடலை டி.ஆர்.மகாலிங்கமும், சூலமங்கலம் ஜெயலட்சுமியும் பாடினார்கள். ஜி.ராமநாதன் இசை அ மைத்திருந்தார், பாபநாசம் சிவன் பாடலை எழுதியிருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது. படத்தில் இடம்பெற்ற லலிதா - பத்மினியின் நடன நாடகமும் படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணமாக அமைந்தது.
(பால்கோவா பாடலை கேட்க இதனை கிளிக் செய்யவும் https://www.youtube.com/watch?v=7ifl6sKnPn4)




