மோகன்லால், குஷ்பூ மகள்களின் அறிமுக பட டைட்டிலில் ஒற்றுமை | புறக்கணிப்பு : நேற்று அனுபமா... இன்று ஆண்ட்ரியா | தேர்வுகள் ஆரம்பம் : தியேட்டர்களுக்கு சிக்கல் | பஹத் பாசிலின் தெலுங்கு படத்தில் இணைந்த 'எக்கோ' பட வில்லன் | மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' |

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ‛முத்துக்கு முத்தான விழா' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ‛முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள்' எனும் நூல் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை நடிகர் சிவகுமார் வெளியிட சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
‛காற்றில் விதைத்த கருத்து' நூலின் இரண்டாவது பதிப்பும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் இந்த நூலை வெளியிட விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
கவிஞர் முத்துலிங்கத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவரும் இயக்குனருமான பாக்யராஜ், தலைமை தாங்க, இயக்குனர் ஆர்கே செல்வமணி, தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் கருணாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், குட்டி பத்மினி, ரோகிணி, தேவயாணி ராஜகுமாரன், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷிணி உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
கவிஞர் முத்துலிங்கம் பற்றிய குறும்படம் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளை பெற்றது.