'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? | 'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம் |

சமீப வருடங்களாக தென்னிந்திய மொழி நட்சத்திரங்கள் ஒவ்வொரு மொழியிலும் மாறி மாறி நடிப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழில் மட்டுமே படங்களை இயக்கி நடித்து வந்த சேரன் முதன்முறையாக மலையாள திரை உலகில் அடி எடுத்து வைத்து 'நரிவேட்டை' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் நடித்துள்ளார்.
'இஷ்க்' என்கிற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அனுராஜ் மனோகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்ல தற்போது தமிழில் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் பின்னணி கொண்ட படமாக இது உருவாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சேரனின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது.