அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

கடந்த 2007ம் ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'பொல்லாதவன்'. ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தனுஷுக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற பைக் பிஜிஎம் இன்றும் பல பைக்களில் ஒலிக்கிறது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு பொல்லாதவன் படம் இவ்வருடம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே தனுஷின் 3, மயக்கம் என்ன, புதுப்பேட்டை போன்ற படங்கள் கடந்த வருடங்களில் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.