ஒரு ரூபாய் கூட வாங்காமல் கங்கனாவுக்கு டைட்டிலை விட்டுக்கொடுத்த ஜான் ஆபிரகாம் | அனைத்து பாடல்களையும் பாட சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் : பயந்து போய் ஜகா வாங்கிய ரன்பீர் கபூர் | சிவகார்த்திகேயன் படங்களால் 120 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் | நோட்டீஸ் அனுப்பிய ரன்வீர் சிங் : பணிந்தது தொழிலாளர்கள் கூட்டமைப்பு | கேரளாவில் ரீ ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் 'ஹேப்பி' | ஜனநாயகன் ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய் சேதுபதியின் ட்ரெயின் | 61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாரான அமீர்கான் : ஜூலை 5ல் கவுரி ஸ்ப்ராட்டை மணக்கிறார் | பரிமளா அண்ட் கோ படத்திற்கு யுஏ சான்றிதழ் | பிரேம்ஜியை காதலித்தேனா.... : உண்மையை உடைத்து பேசிய சோனா | விஜய் சேதுபதி பட தலைப்பு ‛பக்தா' வா |

தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அடுத்ததாக 'இட்லிக்கடை' படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், 'குபேரா' என்ற தெலுங்கு, தமிழில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். இதில் தனுஷூடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா உள்பட பலர் நடிக்கிறார்கள். சேகர் காமுலா இயக்குகிறார்.
இந்த நிலையில் 'குபேரா' டைட்டிலுக்கு தெலுங்கு இயக்குனரும் தயாரிப்பாளருமான கரிம கொண்ட நரேந்தர் என்பவர் சொந்தம் கொண்டாடினார். அதேபெயரில் 2023ல் டைட்டிலை பதிவு செய்து, படத்தை எடுத்துவருவதாகவும், இந்த பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட வேண்டும் என்றும் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத குபேரா படக்குழு, தற்போது அதே பெயருடன், படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 20ம் தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். முன்னதாக ஏப்.,10ம் தேதி தனுஷின் 'இட்லிக்கடை' படம் ரிலீசாகிறது.




