நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. | ஆஞ்சநேயர் பிறந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய 'ஜெய் ஹனுமான்' |

அமரன் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஒரு பக்கம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற படத்திலும், இன்னொரு பக்கம் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கிற படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களின் மீதான எதிர்பார்ப்பு அமரன் படத்தின் வெற்றியால் அதிகமாக இருக்கிறது.
சமீபத்தில் தான் ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு மதராசி என டைட்டில் வைக்கப்பட்டது. இது ஏற்கனவே அர்ஜுன் நடித்த படத்தின் டைட்டில் தான். ஆனால் தங்களது கதைக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த டைட்டிலை கேட்டு பெற்று வைத்துள்ளார்கள்.
அதே சமயம் இந்த டைட்டில் வைப்பதற்கு முன்பாக இவர்கள் தங்களது படத்திற்கு ஹண்ட்டர் என ஆங்கிலத்தில் டைட்டில் வைப்பதாகத்தான் திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால் அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் நடித்த படத்திற்கு வேட்டையன் என்கிற டைட்டில் வைக்கப்பட்டு அந்த படமும் வெளியானது.
அதன்பிறகு அதே அர்த்தம் தரக்கூடிய ஹண்ட்டர் என்கிற டைட்டிலுடன் தங்களது படம் வெளியானால் அது ரஜினிகாந்த்திற்கு சங்கடம் தரக்கூடியதாக இருக்கும் என்பதாலும், ரஜினி மீது இவர்கள் இருவருமே அதிகம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் என்பதாலும் இந்த படத்திற்கு வேறு டைட்டிலை மாற்றலாம் என முடிவு செய்த போது தான் இந்த மதராஸி டைட்டில் பொருத்தமாக கிடைத்தது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.