‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து திரைக்கு வந்த 'விடாமுயற்சி' கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகிறது. கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தை அஜித் ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். மேலும் தற்போது கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் அஜித்குமார், அடுத்தபடியாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
இந்த நேரத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' என்ற படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் ஏற்கனவே அஜித்தை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும், இந்த கதையை இன்னும் மெருகேற்றி வையுங்கள். கார் ரேஸ் முடிந்து திரும்பியதும் இன்னொரு முறை கேட்டுவிட்டு பிடித்து விட்டால் இந்த கதையில் நடிக்கிறேன் என்று அஜித்குமார் கூறியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நித்திலன் சாமிநாதன் இயக்கிய 'மகாராஜா' படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு, சீன மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு பெரிய அளவில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.