பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் | பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய நிலவரம் என்ன ? | ஒரு மாதம் விடுமுறை எடுக்கப் போகும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக்: உதவி இயக்குனராக பணியாற்றிய ரஜினிகாந்த் | பிளாஷ்பேக் : அதிக படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் | என் சினிமா வாழ்க்கையே முடிந்தது என நினைத்தேன் ; அக்ஷய் குமார் வெளியிட்ட அதிர்ச்சி தருணம் |

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'கேம் சேஞ்ஜர்'. இப்படம் இந்த வாரம் ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும், ஒரு மாநில முதல்வருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்தை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிடுகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவாக இப்படத்தின் தமிழ் வசனங்கள் எழுதப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கிலிருந்து வரும் படம் என்பதால் இங்கும் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிப்பட்ட வசனங்களை எழுதியுள்ளார்களாம்.
படத்தைத் தயாரித்துள்ள தில் ராஜு, விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்தவர். அதனால், அவரும் இப்படியான வசனங்களுக்கு ஓகே சொல்லிவிட்டாராம். படம் வெளியானதும் படத்தில் உள்ள அரசியல் வசனங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்துமா அல்லது சர்ச்சையை ஏற்படுத்துமா என்பது தெரிந்துவிடும்.




