ஜனநாயகனுக்கு எதிராக விநியோகஸ்தர்கள்: பணத்தை திரும்பி கேட்கிறார்களா? | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'துரந்தர் 2' டிரைலர் | போர்சூழல் எதிரொலி : செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் வெளியிட தடை | தமிழில் நடிக்கும் குஷி ரவி | கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு | பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா | செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா | திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்' | ஓடிடியில் டாப் 2ல் 'வித் லவ்' |

விசேஷ நாட்களில் தங்கள் படங்கள் பற்றிய அப்டேட்களை வெளியிடுவதை தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன. நேற்று புத்தாண்டான 2025ம் ஆண்டின் முதல் நாள். அதனால், பல படங்களைப் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகின.
புத்தாண்டு வாழ்த்து அறிவிப்பு, வெளியீடு அறிவிப்பு, முதல் பார்வை அறிவிப்பு, முதல் பாடல் அறிவிப்பு, படங்கள் பற்றிய அறிவிப்பு என விதவிதமான அப்டேட்டுகளை அந்தந்தப் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பாக வெளியிடப்பட்டன.
“2 கே லவ் ஸ்டோரி, ஆர்யன், ஏஸ், அட்ரஸ், அஸ்திரம், பேபி பேபி, ட்ராமா, என் காதல் அவள் கண்களிலே, இட்லி கடை, காதல் என்பது பொதுவுடமை, காதலிக்க நேரமில்லை, கலியுகம், குடும்பஸ்தன், மெட்ராஸ்காரன், மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், படைத் தலைவன், பயர், பீட்டர், பிசாசு 2, ரெயின்போ காலனி 2, ரெட்ரோ, ரெட்ட தல, ரிங் ரிங், சிவப்பு சேவல், டென் ஹவர்ஸ், தருணம், துப்பறிவாளன் 2, வல்லான், வருணன், யோலோ,” என மொத்தமாக 30 படங்களின் அப்டேட்டுகள் நேற்று வெளியாகின.
ஒரே நாளில் இத்தனை படங்களின் அப்டேட்டுகளை பலரும் கவனிக்கத் தவறியிருப்பார்கள். அவர்களுக்காகவே இப்படி ஒரு தகவல் பதிவு. அடுத்து பொங்கல் தினத்தில் இப்படியான அப்டேட் அறிவிப்புகள் மீண்டும் வெளியாகும். அப்போது இதைவிட அதிக எண்ணிக்கையிலான அறிவிப்புகள் வரலாம்.