பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கலக்கும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. |

சினிமா விளம்பர யுத்திகளில் முக்கியமானதாக இருந்தது கட்அவுட். படம் வெளியாகி உள்ள தியேட்டர்களில் பிரமாண்ட கட்அவுட்கள் வைக்கப்பட்டது. பெரிய ஹீரோக்கள் என்றால் 100 அடி உயரம் வரைகூட கட்அவுட் வைக்கப்பட்டது. பின்னர் பொது இடங்களிலும் வைக்கப்பட்டது. கட்அவுட் மீது ஏறி அதற்கு பாலாபிஷேகம் செய்த சில இளைஞர்கள் கீழே விழுந்து இறந்ததால் அரசு கட்அவுட்களை தடை செய்தது.
1940ல்தான் முதல் கட்அவுட் வைக்கப்பட்டது. ஆனால் அது ஹீரோவுக்கு அல்ல ஹீரோயினுக்கு, அதுவும் அறிமுக ஹீரோயினுக்கு. அன்றைக்கு முன்னணி இயக்குனராக இருந்த கே.சுப்ரமணியம், 'பக்த சேதா' என்ற படத்தை இயக்கினார். அவரே தயாரிக்கவும் செய்தார். அவரது கார் டிரைவர் மகள் ஜி.சுப்புலட்சுமியை நாயகி ஆக்கினார் கே.சுப்ரமணியம், நாயகன் பாபநாசம் சிவன். இவர்களுடன் கொத்தமங்கலம் சுப்பு, மாஸ்டர் திருமலை உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இது மகாபாரதத்தில் வரும் ஒரு கிளை கதை. அஸ்தினாபுரத்தின் புறநகர் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்குள் வந்து விஷ்ணுவை வழிபடக்கூடாது என்ற சட்டம் இருந்தது. இதனை துரோணாச்சாரியார் கடுமையாக கடைபிடித்து வந்தார். அந்த சேரி பகுதியை சேர்ந்த சேதா என்கிற செருப்பு தொழிலாளி மகன் பிராமண பெண்ணை காதலிக்கிறார். இதனால் துரோணாச்சாரியர் சேதாவுக்கு கடும் தண்டனை வழங்குகிறார்.
உச்சகட்டமாக ஒரே இரவிற்குள் நீ ஆயிரம் ஜோடி செருப்புகளை தைத்து கொடுத்தால் உன் காதலை ஏற்று திருமணம் செய்து வைப்பதாக கூறுகிறார். சேதாவும் தயாரிக்க தொடங்குகிறார். ஆனால் அவரால் முடியாமல் மயங்கி விழுந்து விடுகிறார். மறுநாள் பார்த்தால் ஆயிரம் ஜோடி செருப்பு தயாராக உள்ளது. இது இறைவனின் விளையாட்டு என்று கருதும் துரோணாச்சாரியார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.
புராணப் படம் என்றாலும் ஜாதி கலப்பு திருமணத்தை பேசிய விதத்தில் இந்த படம் கொண்டாடப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. இந்த படத்தின் விளம்பரத்திற்காக சென்னை சட்டக் கல்லூரி எதிரில் ஜி.சுப்புலட்சுமிக்கு ஆளுயர கட்அவுட் வைக்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு வாரமும் அந்த கட்அவுட்டிற்கு புதிது புதிதாக பட்டுச் சேலையும் அணிவிக்கப்பட்டது.