மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

தமிழகத்தில் சுமார் 1000 தியேட்டர்கள் உள்ளன. முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்கள் தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும். ஆனால், மற்ற மொழிகளிலிருந்து டப்பிங் ஆகி வரும், குறிப்பாக தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வரும் படங்களுக்கு அவ்வளவு தியேட்டர்கள் கிடைக்காது.
ஆனால், முதல் முறையாக தமிழ்ப் படங்களுக்கு இணையாக 'புஷ்பா 2' படம் இன்று(டிச., 5) வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 800 தியேட்டர்களில் இப்படத்தைத் திரையிட்டுள்ளார்கள். மற்ற மொழிகளிலிருந்து இங்கு டப்பிங் ஆகி வரும் ஒன்று இவ்வளவு தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறை.
படத்திற்கான முன் பதிவு சுமாராக இருந்தாலும் படத்திற்கான விமர்சனங்கள் வந்த பிறகு வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.