பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் | உரிமைக்குரல், நட்புக்காக, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது |

விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வெளிவந்த 'மகாராஜா' படம் 100 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. அப்படம் இரண்டு தினங்களுக்கு முன்பு சீனாவில் சுமார் 30 ஆயிரம் காட்சிகளாக வெளியானது. பிரிமியர் காட்சி மற்றும் முதல் நாள் வசூலாக சுமார் 10 கோடி வரை வசூலித்தது. நேற்றைய இரண்டாவது நாள் வசூல் முதல் நாள் வசூலை விட இரண்டு மடங்காக அதிகாரித்துள்ளது. மொத்த வசூல் தற்போது 20 கோடி வரை வந்துள்ளது. இது இன்னும் அதிகமாகவும் வாய்ப்புள்ளது.
சீனாவில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஜப்பான் நாட்டிலும் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம். தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களுக்கு ஜப்பான் நாட்டில் வரவேற்பு இருக்கிறது. 'மகாராஜா' படம் ஏற்கெனவே ஓடிடி தளத்தில் வெளியாகி வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சீனாவில் கிடைத்துள்ள வரவேற்பு போலவே ஜப்பான் நாட்டிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
ரஜினி சாதனையை முறியடிப்பாரா
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ‛2.0' படம் சீனாவில் 33 கோடி வசூலித்த நிலையில் தற்போது மகாராஜா படம் 2 நாட்களில் 20 கோடி வசூலித்திருப்பதோடு இன்னும் அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ரஜினியின் 2.0 வசூலை இந்த படம் முறியடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் ஹிந்தியில் அமீர்கான் நடித்து சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட ‛தங்கல்' படம் 1400 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.