10வது படத்திலும் புது இயக்குனரை அறிமுகப்படுத்தும் சிவகார்த்திகேயன் | மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் முனீஷ்காந்த் | 'கடல் கன்னி' ஆண்ட்ரியா | சமூக வலைதளத்தில் ஆபாச பதிவுகள்: லாவண்யா திரிபாதி போலீசில் புகார் | பிளாஷ்பேக்: தன் படத்தை பார்க்க விரும்பாத விஜயகாந்த் | பிளாஷ்பேக்: தமிழில் படமான உலக சினிமா | 'ஜனநாயகன்' ஓடிடி உரிமை ஒப்பந்தம் ரத்து? | அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் 'எஎ22 - எ6' பட டீசர் ? | எம்ஜிஆர் பற்றி அவதூறு பேச்சு : தெலுங்கு நடிகருக்கு விஷால் கண்டனம் | 8 வார இடைவெளியில் ஓடிடி: தென்னிந்திய தியேட்டர் சங்கம் அதிரடி முடிவு |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் நீண்டகால தயாரிப்பாக உருவாகி வரும் படம் 'விடாமுயற்சி'. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசண்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்துள்ளது.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் திடீரென எந்தவித முன்னறிவிப்பு இன்றி நேற்று நள்ளிரவு 11:08 மணியளவில் சர்ப்ரைஸாக வெளியானது. 1:48 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில் ஒரு வசனம் கூட இல்லை. கார் சேஸிங், அதிரடியான ஆக்ஷன் காட்சிகல் டீசரில் இடம் பெற்றுள்ளன. அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக டீசர் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. 'எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' என டீசரில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்டில் இந்த டீசர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என டீசரில் அறிவித்துள்ளனர். டீசர் வெளியான 11 மணிநேரத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.




