ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் | 50 லட்சம் சம்பளத்தை விட்டு இலங்கை படத்தில் நடித்த டி.ஜே .பானு | கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி? | 'நடிகர்கள் உண்மை ஹீரோக்கள் அல்ல' : நடிகர் சூரி வெளிப்படை | ‛பெத்தி' ஓடிடி விற்பனை எவ்வளவு |

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படம் தவிர்த்து மற்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது, காதலிக்க நேரமில்லை, ஜீனி படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இதற்காக ஜெயம் ரவி நான்கு நிபந்தனைகள் போட்டுள்ளாராம்.
இது குறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படத்திற்கு நான் கேட்கும் தொகையை சம்பளமாக தர வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு நிகராக காட்சிகள் இடம்பெற வேண்டும். என் கால்ஷீட் தேதிக்காக வற்புறுத்தல் செய்ய கூடாது. இப்படத்தின் விளம்பரம் மற்றும் புரொமோசனில் சிவகார்த்திகேயனுக்கு நிகரான முக்கியதுவம் தர வேண்டும்" என நான்கு நிபந்தனைகள் முன்வைத்துள்ளார் ஜெயம் ரவி.




