திருவிளையாடல், அவள் ஒரு தொடர்கதை, பைசன் : ஞாயிறு திரைப்படங்கள் | பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் |

ரஜினி ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்த பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாமே ஆக்ஷன் படங்களாகத்தான் இருந்தது. அப்போது முன்னணியில் இருந்த இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் 'கர்ஜனை' என்ற படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் இயக்கினார். இதில் தமிழ், தெலுங்கு பதிப்புகளில் ரஜினி நடிப்பது என்றும், மலையாளத்தில் அப்போது அங்கு ஆக்ஷன் ஹீரோவாக இருந்த ஜெயன் நடிப்பது என்றும் முடிவாகி இருந்தது.
படத்தின் தலைப்பு 'கர்ஜனம்'. ஜெயனும் 30 சதவிகித படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்த நிலையில்தான் அவர் 'கோழியிழக்கம்' படத்தில் நடித்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதனால் ஜெயனுக்கு பதில் ரஜினியே மலையாளத்தில் நடித்தார். மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் வெளியானது. மலையாளத்தில் படம் தொடங்குவதற்கு முன் ஜெயன் நடித்த சில காட்சிகள் திரையிடப்பட்டது. என்றாலும் 3 மொழிகளிலுமே படம் தோல்வி அடைந்தது.
இந்த படத்தில் ரஜினியுடன், மாதவி, கீதா, ஜெயமாலினி நடித்தார்கள். மற்ற கேரக்டர்களில் மற்ற மொழி நடிகர்கள் தனித்தனியாக நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்தார். 3 மொழிகளிலுமே பாடல்கள் ஹிட்டானது.