எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் |

தெலுங்கு, தமிழில் நடித்து வரும் நடிகர் நாகார்ஜுனா. தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த அமலாவைக் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் பிறந்தவர்தான் நடிகர் நாக சைதன்யா. சமந்தாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பின் சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்தவனர். அடுத்து நடிகை சோபிதா துலிபலாவை டிசம்பர் 4ம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார் நாக சைதன்யா.
இதனிடையே, நாகார்ஜுனா - அமலா தம்பதியினரின் ஒரே மகனான நடிகர் அகில் திருமணத்தை சற்று முன் அறிவித்துள்ளார் நாகார்ஜுனா.
“எங்கள் மகன் அகில் நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது மருமகளாக வரப் போகிறவர் ஜைனாப் ரவ்ட்ஜி.
ஜைனாபை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த இளம் தம்பதியரை வாழ்த்த எங்களுடன் இணையுங்கள். மேலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி, மற்றும் உங்களது எண்ணற்ற ஆசீர்வாதத்துடன் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.