ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் | 2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' | ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தில் தனுஷ் நடிக்கிறாரா...? | 'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! |

"புது ராகம் படைப்பதாலே... நானும் இறைவனே...'' - இந்த வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையா, இப்பாடலுக்காக இசையை கோர்த்த இசைஞானி இளையராஜாவுக்கு சாலப்பொருந்தும். தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, இசைக்கலைஞனாய் உருவெடுத்து, உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர்.
இந்திய சினிமாவின் இசை மேதையான இளையராஜா 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ஒரு சிம்பொனி இசையை வெளியிட்டு இருந்தார். இப்போது இங்கிலாந்தில் தான் பதிவு செய்த சிம்பொனியை வெளியிட போகிறார். இதுதொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள இளையராஜா, அதன் உடன், ‛இங்கிலாந்தில் நான் பதிவு செய்த முழு சிம்பொனி இசையை அடுத்தாண்டு ஜன., 26ல் வெளியிட போகிறேன். இதை இந்த தீபாவளி திருநாளில் அறிவிப்பது மகிழ்ச்சி' என குறிப்பிட்டுள்ளார்.




