தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

தன்னுடைய தனித்துவமான வசன உச்சரிப்பால் நயன்தாரா, காஜல் அகர்வால், ஸ்ரீ திவ்யா, எமி ஜாக்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து வருபவர் டப்பிங் கலைஞர் ரவீணா ரவி .பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவியின் மகள்தான் இவர். அதுமட்டுமல்ல சில வருடங்களுக்கு முன்பு ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலமாக நடிகையாக மாறிய இவர் அதன் பிறகு வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து ஒரு நடிகையாகவும் பாராட்டுக்களை பெற்றார். தமிழ் மட்டுமல்லாது மலையாள படங்களிலும் அங்குள்ள சில கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மலையாள திரைப்பட இயக்குனர் தேவன் ஜெயக்குமார் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் ரவீணா ரவி. அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் மலையாளத்தில் நிஜமான நாய்களை வைத்து வாலாட்டி என்கிற படத்தை இயக்கியவர் தான் தேவன் ஜெயக்குமார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நாய்க்கு டப்பிங் குரல் கொடுத்தவர் ரவீணா ரவி தான். ஆனால் இது காதல் திருமணமா இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்பது பற்றி எந்த தகவலும் ரவீணா ரவி சொல்லவில்லை.