Advertisement

சிறப்புச்செய்திகள்

'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

40 கோடியை சுருட்டிய லப்பர் பந்து

22 அக், 2024 - 11:08 IST
எழுத்தின் அளவு:
Lubber-Pandhu-collected-40-crore
Advertisement


கடந்த மாதம் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் 'லப்பர் பந்து' திரைப்படம் வெளியானது. கிராமத்து பின்னணியில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்குள் ஏற்படும் குழு மோதலை மையப்படுத்தி வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கும் அவர் கிரிக்கெட்டில் தீவிரமாக எதிர்க்கும் அட்டகத்தி தினேஷுக்குமான உறவு முறை வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருந்தது.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக, இளம் பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருந்த நடிகை சுவாசிகாவின் நடிப்பும் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் கிரவுண்டின் பின்னணியில் அடிக்கடி ஒலிக்கும் இடம் பெற்றிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 'நீ பொட்டு வெச்ச தங்க குடம்' என்கிற பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

இந்தப் படம் வெளியாகி தற்போது ஒரு மாதம் ஆன நிலையில் கிட்டத்தட்ட 40 கோடி வசூலித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தற்போதும் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் சில திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருப்பதை தொடர்ந்து 50 கோடி என்கிற வசூல் இலக்கை தொடலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதனாலேயே கடந்த அக்டோபர் 18ல் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்னும் சில நாட்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.250 கோடி சொத்துகளை அபகரிக்க வலையில் சிக்க வைக்க முயற்சி: நடிகர் பாலா பரபரப்பு குற்றச்சாட்டுரூ.250 கோடி சொத்துகளை அபகரிக்க வலையில் ... விருது படத்தை வாங்கி வெளியிடும் ராணா விருது படத்தை வாங்கி வெளியிடும் ராணா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap