
சங்கராந்தி தினத்தில் ஷங்கரின் கேம் சேஞ்சர்
“படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிடுவதை விட சங்கராந்தி தினத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என வினியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், சிரஞ்சீவி சாரின் "விஷ்வம்பரா" படத்தையும் ஷங்கராந்தி தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். கடந்த மூன்று வருடங்களாக "கேம் சேஞ்சர்" படத்தை எடுத்து வருவது குறித்து சிரஞ்சீவியிடமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்திடமும் பேசினோம். அவர்களது படமும் டிசம்பர் மாதத்தில் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும். இருந்தாலும் எங்களுக்காக அப்படத்தை தள்ளி வைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றி,” என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் தில் ராஜு.
அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள படத்தின் வில்லன் எஸ்ஜே சூர்யா, “டபுள் ஷங்கர்-ஆந்தி” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!