ஆகஸ்ட் 14ல் சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரிலீஸ் | 42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி | எனக்கு பிடித்த படம் 'ரிதம்': அர்ஜூன் பேட்டி | ஆலியா பட் சண்டை காட்சிகள்: ஆச்சரியப்பட்ட பாபி தியோல் | வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ் | 'டான் 3' சர்ச்சையை சமரசமாக முடிக்க ரன்வீர் சிங் முயற்சி | கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன் | தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல் | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் கிச்சா சுதீப் | எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; 'காட்டாளன்' படக்குழு வேண்டுகோள் |

பிரபல பின்னணி இசை பாடகர் ஆரவமுதன் வெங்கட ரமணன் என்கிற ஏ.வி.ரமணன். ஏராளமான பின்னணி பாடல்களை பாடி உள்ளார். பாடகி உமா ரமணனை திருமணம் செய்து கொண்டு அவருடன் இணைந்து 'மியூசியானோ' என்ற இசை குழுவை தொடங்கி ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். தொலைக்காட்சி வரலாற்றின் முதல் இசை நிகழ்ச்சியான 'சப்தஸ்வரங்கள்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கவியரசர் கண்ணதாசன் இவருக்கு 'இசை நிலவு' என்ற பட்டத்தை வழங்கினார்.
ஆனால் ஏ.வி.ரமணன் அடிப்படையில் நடிகராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தார். 1980ம் ஆண்டு வெளிவந்த 'காதல் காதல் காதல்' என்ற படத்தில் அவர்தான் ஹீரோ. அவரது ஜோடியாக தீபா நடித்திருந்தார். எம்.ஏ.காஜா இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு சத்ரியன், என்னவளே, பாய்ஸ், மதுர உள்ளிட்ட சில படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தார்.




