சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வேட்டையன்'. இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். என்கவுன்டர் தொடர்பான கதையில் ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் வெளியானது. அக்., 10ம் தேதி படம் வெளியாகிறது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இதன் டிரைலரை வருகின்ற அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




