ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இதில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கின்றார். ஏற்கனவே இதன் இரண்டு கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிவடைந்தது. விரைவில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் துவங்குகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அர்ஜுன் தாஸ் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும் தனக்கு பிடித்த கதாபாத்திரம் கிடைத்தால் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்து பெயர் வாங்கினார். இப்போது அஜித் படத்திலும் வில்லத்தனம் செய்ய போகிறார்.




