சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டது. இந்த சீசனின் போட்டியாளர்கள் யார் யார் என்பதை முடிவு செய்தும் விட்டார்கள் என்ற தகவலும் வெளியாக உள்ளது. அது பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியில் 'லீக்' ஆகலாம்.
இதனிடையே, கமல்ஹாசன் கடந்த ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தாக்குப் பிடிக்க வைத்ததில் முக்கிய பங்காற்றினார் என்பதும் மறுப்பதற்கில்லை. அவருக்காகவே நிகழ்ச்சியைப் பார்த்தவர்களும் உண்டு. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் செய்த விஷயங்களை சரியான கோணத்தில் அணுகினார் என்ற பாராட்டும் அவருக்கு இருந்தது. அவருடைய வயது, அனுபவம், பேச்சுத் திறமை, அணுகுமுறை ஆகியவற்றால் அந்த 'தொகுப்பாளர்' என்ற ஏறக்குறைய நிஜ கதாபாத்திரத்தை சரியாகவே செய்திருந்தார்.
அந்த இடத்தில் தற்போது விஜய் சேதுபதி பொருத்தமாக நடந்து கொள்வாரா என்ற கேள்வியும், சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. சிறந்த நடிகர், யதார்த்த மனிதர் என்ற அடையாளம் மட்டுமே விஜய் சேதுபதிக்கு உள்ளது. அனுபவம், பேச்சுத் திறமை, அணுகுமுறை ஆகியவை இந்த பிக் பாஸ் 'தொகுப்பாளர்' கதாபாத்திரத்தில் அவரிடமிருந்து எப்படி வெளிப்படும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
இதற்கு முன்பு 'நம்ம ஊரு ஹீரோ, மாஸ்டர் செப் இந்தியா - தமிழ் சீசன் 1' ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் விஜய் சேதுபதி. அவற்றிற்கு குறிப்பிடும்படியான பெரிய வரவேற்பு அமையவில்லை. அதை மாற்றி டிவி தொகுப்பாளராக முத்திரை பதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.