பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்” | கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்? | நீளிரா: மற்றுமொரு இலங்கை படம் | உங்கள் படங்களில் இன்டர்நேஷனல் டச் இருக்கிறது : மலையாள இயக்குனரை பாராட்டிய பிரபாஸ் | 'டிமான்ட்டி காலனி'யில் கொடூர வில்லனாக குரு சோமசுந்தரம் | சினிமாவை தவிர எல்லாமே எனக்கு இரண்டாம் பட்சம்தான்: கென் நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக்: சார்லி சாப்ளின் தோற்றத்தில் வலம் வந்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை புகழ்ந்து பாடிய சிவாஜி | 100 ஷோலேவுக்கு சமம் : துரந்தர் 2 படம் பார்த்த ராம்கோபால் வர்மா சிலாகிப்பு | 'ஜனநாயகன்' எப்போது வெளியாகும்? |

விஜய் கதாநாயகனாக நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கோட்' படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான இசை வெளியீடு 'சிங்கிள், சிங்கிள்' ஆகவே நடந்து முடிந்துவிடும் எனத் தெரிகிறது.
இதற்கு முன்பு, “விசில் போடு, சின்னச் சின்ன கண்கள், ஸ்பார்க்' ஆகிய பாடல்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சிங்கிள், சிங்கிளாக வெளியாகின. அடுத்து நாளை மறுதினம் ஆகஸ்ட் 31ம் தேதி 4வது சிங்கிளாக ஒரு பாடலை வெளியிட உள்ளார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
அந்தப் பாடல் விஜய், த்ரிஷா இணைந்து அதிரடியாக நடனமாடியுள்ள பாடல் என்று சொல்கிறார்கள். படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக அந்தப் பாடலும் இருக்கும் என்கிறார்கள். இந்த வீக் என்ட்-ல் பாடலை வெளியிட்டு 'வைப்' ஏற்படுத்தி அப்படியே ரிலீஸ் வரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம்.
முந்தைய மூன்று பாடல்களுக்குக் கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் நான்காவது பாடல் 'நச்' என்று இருக்குமா என்பது வெளியாக உள்ள முதல் 'புரோமோ'விலேயே தெரிந்துவிடும்.




