மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவரின் படம் வெளிவந்தால் அதற்கு முன்பும், பின்பும் படங்களை வெளியிடப் பலரும் தயங்குவது பல வருடங்களாகவே நடந்து வருகிறது. வேறு வழியில்லாமல் அப்படி படங்களை வெளியிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அடுத்த வாரம் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் வெளிவர உள்ளது. அதனுடன் போட்டி போட யாரும் தயாராக இல்லை. தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த தியேட்டர்களிலும் அப்படம் வெளியாகும் என்றும் சொன்னார்கள். ஆனால், அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அடுத்த வாரம் அப்படத்தின் வெளியீடு காரணமாக இந்த வாரமே குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
நானி, பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா நடித்து தெலுங்கில் தயாராகி தமிழிலும் டப்பிங் ஆகியுள்ள 'சூர்யாஸ் சாட்டர்டே', அர்ஜூன் நிக்கி கல்ரானி நடித்து மலையாளத்தில் தயாராகி தமிழிலும் வெளியாக உள்ள 'விருந்து' ஆகிய இரண்டு படங்கள்தான் இந்த வாரத்தின் முக்கிய படங்கள். 'விருந்து' படத்தில் அர்ஜூன் கதாபாத்திரம் மட்டும் தமிழ் பேசி நடித்துள்ளதாகத் தெரிகிறது. இவை தவிர 'காட்டானை' என்ற படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 'சூர்யாஸ் சாட்டர்டே' படத்தில் இப்போதைய டிரெண்டிங் ஸ்டார் எஸ்ஜே சூர்யா இருப்பதால் படத்திற்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.