60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி | இருமுடிகட்டு : அய்யப்பன் மகிமை பேசும் இருமொழிப் படம் | காதல் கணவரை விவாகரத்து செய்யும் சுபா பூஞ்சா |

பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவான தெலுங்குப் படமான 'கல்கி 2898 எடி' நேற்று உலகம் முழுவதும் வெளியானது. அமெரிக்காவில் முதல் நாள் முன்பதிவு, இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக நடந்தது.
நேற்றைய முதல் நாள் வசூல் 5 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடந்துள்ளது. பிரிமியர் காட்சிகள் மூலம் மட்டும் சுமார் 3.8 டாலர் கிடைத்துள்ளது. பிரிமியர் காட்சிகள் மூலம் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்தின் பிரிமியர் காட்சி வசூலை இப்படம் முறியடித்து சாதனை புரிந்துள்ளது.
உலக அளவில் இப்படம் முதல் நாளில் சுமார் 180 கோடி வசூலித்திருக்கலாம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 115 கோடி, வெளிநாடுகளில் 65 கோடி வசூல் என்கிறார்கள். முதல் நாள் வசூலைப் பொறுத்தவரையில் 'ஆர்ஆர்ஆர்' படம் 220 கோடி, 'பாகுபலி 2' படம் 215 கோடி வசூலைப் பெற்றிருந்தது. அந்த வரிசையில் 'கல்கி 2898 எடி' படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.




