'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா | துல்கர்-கல்யாணி வசனம் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ; கேரள போலீஸ் பலே ஐடியா | பேருந்து - கார் விபத்து: தப்பிய ரஜிஷா விஜயன் பட ஹீரோ | பாவனா படம் பார்க்க வந்த மஞ்சு வாரியர் ஏற்படுத்திய பரபரப்பு | சவுதி அரேபியன் படத்திற்காக கை கோர்த்த சல்மான்கான்-சஞ்சய் தத் | பாலாவின் அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபடும் மாரி செல்வராஜ் | பிளாஷ்பேக்: ஒரே பஞ்ச் டயலாக்கில் வெளிவந்த இரண்டு படங்கள் | அக்ஷய் கண்ணாவை கவர்ந்திழுக்க முயற்சித்த கங்கனா ரணாவத் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் நல்லா நாகப்பாவாக பார்த்திபன் | தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் இரண்டு மாதங்களே… எந்தப் படம் வெளியாகும் ? |

2024ம் ஆண்டில் அடுத்து வரும் வாரங்களில் சில பல பெரிய படங்கள் வெளியாக உள்ளன. ஜுலை 12ம் தேதி 'இந்தியன்', ஜுலை 27ம் தேதி 'ராயன்', செப்டம்பர் 5ம் தேதி 'தி கோட்', அக்டோபர் 10ம் தேதி 'கங்குவா', அக்டோபர் மாதத்தில் 'வேட்டையன்' ஆகிய படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'வேட்டையன்' படமும் அக்டோபர் 10ம் தேதிதான் வெளியாகும் என்று தெரிகிறது.
இப்படி சில முக்கிய படங்களின் வெளியீடுகள் பற்றி வந்த அறிவிப்புகள் அந்தந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. குறிப்பாக சூர்யா ரசிகர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த 'கங்குவா' பட வெளியீட்டு அறிவிப்பு நேற்று வெளியானதை அவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே சமயம் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தின் அறிவிப்பை வெளியிடாமல் இருப்பது விக்ரம் ரசிகர்களைக் கோபப்படுத்தியுள்ளது. இப்படங்களின் வெளியீடு பற்றி நேற்றுதான் நாம் குறிப்பிட்டிருந்தோம். நாம் சொன்னது அவர்கள் காதில் விழுந்துவிட்டது போல, 'கங்குவா' படத்தின் அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டார்கள். அது போல 'தங்கலான்' அறிவிப்பையும் விரைவில் வெளியிட்டால் கடும் வெறுப்பில் இருக்கும் விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
அடுத்து கார்த்தி நடிக்கும் 'மெய்யழகன், வா வாத்தியார்', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' ஆகிய படங்களின் வெளியீட்டு அறிவிப்புகளை ரசிகர்கள் கேட்கலாம்.